topics-detail2018-10-02T11:33:04+00:00

2019-ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் சிகாகோவில் நடைபெற உள்ள உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் சிறப்பு நோக்கங்கள்; தமிழில் உள்ள செவ்விலக்கியங்களை உலகிற்கு அறிமுகப் படுத்துதல்; தமிழர், தமிழ் மொழி, இலக்கியங்கள், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் பழமையும், தனிச்ச்சிறப்பையும் ஆய்வு செய்தல் ஆகியவை ஆகும். அத்துடன் தமிழ் அறிஞர் பெருமக்கள் தற்கால தமிழ் உரைநடை, பாடல்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும் என இந்த மாநாடு ஊக்குவிக்கின்றது. இந்நோக்கங்கள் சிறப்புற, வெற்றிபெற, கீழ்கண்ட தலைப்புகளில் ஆழ்ந்த ஆய்வோடு அழகுற எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள், இம்மாநாட்டில் இடம்பெற வரவேற்கப்படுகின்றன.

  1. செவ்விலக்கியங்கள் (சங்க இலக்கியங்கள்)
    • தமிழ்ச் செவ்விலக்கியங்களும் பிறமொழிச் செவ்விலக்கியங்களும்: ஒரு ஒப்பீடு
    • புறநானூறு, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு முதலிய பிற தமிழ்ச் செவ்விலக்கியங்கள் தமிழர்ப் பண்பாட்டுக் கருவூலங்கள்
    • செவ்விலக்கியங்களில் இயற்கை
    • தமிழ்ச் செவ்விலக்கியங்களில் பெண்கள்
    • தமிழ்ச் செவ்விலக்கியங்கள் காட்டும் பண்டைத் தமிழகத் தாழ்நிலைக் குடிமக்கள்
    • தமிழ்ச் செவ்விலக்கியங்கள் காட்டும் பழங்காலக் கல்விநிலை
    • இலக்கியமே வரலாறு அல்லது வரலாறே இலக்கியம்; இக்கோட்பாட்டினைப் புறநானூறு, பதிற்றுப்பத்து முதலிய செவ்விலக்கியங்கள் மூலம் ஆய்வு செய்தல்
  2. தமிழ் நாகரிகத்தின் பழமையும் அது உலகெலாம் பரவிய வகையும்
    • தமிழர்த் தோற்றத்தையும் அவர் உலகெலாம் பரவிய வகையும் மரபியல் மூலமும் (genetics) மரபியல் காட்டும் வழிமுறை வகையிலும் (genographics) ஆய்வு செய்தல்
    • தமிழ்ச் சங்கங்களும் தமிழர் நாகரிகமும் வளர்ந்த குமரி நாடு அல்லது குமரிக் கண்டம் ஒன்று இருந்தமையை, வரலாறு, இலக்கியம், அகழ்வாய்வு (archeology), நிலவியல் (geology) போன்ற அறிவியல் சான்றுகளோடு நிறுவ ஆய்வு செய்தல்
    • பழந்தமிழர்ப் பாண்பாட்டினைக் கீழே காணும் பழம்பெரும் பண்பாடுகளோடு ஒப்பாய்வு செய்தல்
      • எகிப்தியர் பண்பாடு
      • எபரேயர் பண்பாடு
      • கிரேக்கர் பண்பாடு
      • ரோமையர் பண்பாடு
      • சீனர் பண்பாடு
    • உலகத்தின் பழம்பெரும் நாகரிக வளர்ச்சியில் தமிழர்ப் பங்கீடு (contribution); கீழுள்ள நாகரிகம் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்க
      • சிந்துவெளி நாகரிகம்
      • சுமேரிய நாகரிகம்
      • மெசபட்டோமியா, அக்கேடின் நாகரிகம்
      • எகித்திய நாகரிகம்
      • மத்தியதரைக்கடல் நாகரிகம்
    • பழந்தமிழர் நாகரிகம் குறித்து இராசு அடிகளாரின் (Rev. Fr. Heras S.J.) கண்டுபிடுப்புகள்
    • பழந்தமிழர் நாகரிகம் குறித்து பேராசிரியர் அசுகோ பொர்போலாவின் (Asko Parpola) கண்டுபிடுப்புகள்
    • பழந்தமிழ் நாகரிகம் குறித்து புதுச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியர் இராசன் அவர்களின் அகழ்வாய்வு கண்டுபிடுப்புகள்
    • தென்னிந்தியாவில் ஆதிச்சநல்லூர், பொருந்தல், கீழடி முதலிய பிற இடங்களில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகள்
  3. தொல்காப்பியம்
    • தொல்காப்பியமும் தற்கால மொழியியலும்
    • தொல்காப்பியர் காலம்
    • தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள்
    • ஐந்திணைக் கருத்தும் தமிழின் அகப்பொருள் மரபும்
    • தொல்காப்பியமும் கீழே காணும் பிறமொழி இலக்கண நூல்களும்: ஒரு ஒப்பாய்வு. இவற்றில் ஒன்றினை தேர்வு செய்து ஆய்வு செய்க
      • கிரேக்க இலக்கண நூல்கள்
      • இலத்தீன் இலக்கண நூல்கள்
      • எபரேய இலக்கண நூல்கள்
      • வடமொழி இலக்கண நூல்கள்
      • கன்னட இலக்கண நூல்கள்
      • தெலுங்கு இலக்கண நூல்கள்
      • மலையாள இலக்கண நூல்கள்
      • பிறமொழி இலக்கண நூல்கள் (மொழியைக் குறிப்பிடுக)
    • தொல்காப்பியம் முதல் நன்னூல் வரை: தொடர்ந்துவரும் தமிழ் இலக்கண மரபுகள்
  4. திருக்குறள்
    • திருவள்ளுவர், “உலக மக்களின் அறநூல் புலவன்” (‘The Bard of Universal Man’ Dr. G U Pope)
    • திருக்குறள் பண்டைத்தமிழர்தம் பண்பாட்டு நாகரிகக் கருவூலம்
    • திருக்குறளும் வாழும் வழிமுறைகளும் (the art of living)
    • திருக்குறள், தற்கால வாழ்க்கைக்கும் வழிகாட்டும் அறநூல்
    • திருக்குறளும் கீழே காணும் பிற அறநூல்களும்: ஒப்பாய்வு. கீழுள்ள ஒன்றினைத் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்க
      • கிரேக்க அறநூல்கள்
      • இலத்தீன் அறநூல்கள்
      • வடமொழி அறநூல்கள்
      • பிறமொழி அறநூல்கள் (குறிப்பிடுக)
    • திருக்குறளுக்கு பிற நாடுகளில் இருக்கும் வரவேற்பு: ஆய்வு
  5. அறிஞர் பெருமக்களைப் பற்றிய ஆய்வு
    • கீழ்கண்ட அறிஞர் பழங்கால, இடைக்கால, மற்றும் தற்காலத் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகிய இவற்றின் ஆய்வுகளுக்குத் தந்த பெரும் பங்களிப்பு (ஒவ்வொருவர் பங்களிப்பையும் தனிப்பட ஆய்வு செய்து ஆராய்ச்சிக் கட்டுரை எழுதவும்)
      • மறைமலை அடிகளார்
      • விபுலானந்த அடிகளார்
      • தனி நாயக அடிகளார்
      • பரிதிமாற் கலைஞர்
      • தேவநேயப் பாவாணர்
      • கமில் சிலபில் (Kamil Zvelebil)
      • ஏ கே இராமநுசன் (A K Ramanujan)
      • ஆர் கு அசர் (R K Asher)
      • சார்சு ஆர்ட் (George Hart)
      • பிற அறிஞர் பெருமக்கள் (யார் என்று குறிப்பிடுக)
  6. தமிழ் இசையும் கலைகளும்
    • தமிழ் இசை, கலைகள்; இவற்றின் பழமை
    • கருநாடக இசையில் தமிழ் இசையின் தாக்கம்
    • பழங்காலத்தில் வழங்கிய தமிழ் இசைக் கருவிகள்
    • தற்காலத் திரைப்படப் பாடல்களில் சங்க இலக்கியப் பாடல்களின் தாக்கம்
  7. தற்காலத் தமிழ் இலக்கியங்கள்
    • தமிழ் உரைநடை, செய்யுட்கள் (பாடல்கள்); இவற்றின் தற்கால போக்கு
    • தற்கால நாவல்களும் சிறுகதைகைளும்; இவற்றின் புதிய போக்கு
    • தமிழ்க்கல்விக்கும் ஆய்வுக்கும் கணினி பயன்படும் வகைகள்: ஒர் ஆய்வு
  8. தமிழ் மொழியும் மொழியியலும்
    • தொல்காப்பியம்: அதில் பொதிந்துள்ள மொழியியல் நுணுக்கங்களும் இலக்கியக் கோட்பாடுகளும்.