Topics2018-12-28T18:55:24+00:00

2019-ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் சிகாகோவில் நடைபெற உள்ள உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் சிறப்பு நோக்கங்கள்; தமிழில் உள்ள செவ்விலக்கியங்களை உலகிற்கு அறிமுகப் படுத்துதல்; தமிழர், தமிழ் மொழி, இலக்கியங்கள், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் பழமையும், தனிச்ச்சிறப்பையும் ஆய்வு செய்தல் ஆகியவை ஆகும். அத்துடன் தமிழ் அறிஞர் பெருமக்கள் தற்கால தமிழ் உரைநடை, பாடல்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும் என இந்த மாநாடு ஊக்குவிக்கின்றது. இந்நோக்கங்கள் சிறப்புற, வெற்றிபெற, கீழ்கண்ட தலைப்புகளில் ஆழ்ந்த ஆய்வோடு அழகுற எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள், இம்மாநாட்டில் இடம்பெற வரவேற்கப்படுகின்றன.

ஆராய்ச்சிப் பிரிவுகள்

  1. செவ்விலக்கியங்கள் (சங்க இலக்கியங்கள்)
  2. தமிழரின் பழங்கால நாகரிகம்
  3. தொல்காப்பியம்
  4. திருக்குறள்
  5. அறிஞர் பெருமக்களைப் பற்றிய ஆய்வு
  6. தமிழ் இசையும் கலைகளும்
  7. தற்காலத் தமிழ் இலக்கியங்கள்
  8. தமிழ் மொழியும் மொழியியலும்

தலைப்புகள்

  1. செவ்விலக்கியங்கள் (சங்க இலக்கியங்கள்)
    • தமிழ்ச் செவ்விலக்கியங்களும் பிறமொழிச் செவ்விலக்கியங்களும்: ஒரு ஒப்பீடு.
    • சங்க இலக்கியங்கள் தமிழ்ப் பண்பாட்டின் கருவூலம்
    • சங்க இலக்கியங்கள் காட்டும் தமிழக வரலாறு
  2. தமிழரின் பழங்கால நாகரிகம்
    • மரபியல் (Genetics), மரபியல் வழிமுறை (Genographics) அடிப்படையில் தமிழர் தோற்றமும் பரவலும்
    • தமிழ் நாகரிகத்தின் பழைமையை வரலாறு, அகழ்வாய்வு, நிலவியல் ஆகியவைக் காட்டும் ஆதாரங்களோடு ஆய்வு செய்தல்
    • சிந்துவெளி நாகரிகம் பற்றிய புதிய கண்டுபிடுப்புகள். சிந்துவெளியோடு தமிழ் நாகரிகம் ஆகிய பிற நாகரிகங்களை ஒப்பிடுதல்
    • தென்னிந்தியாவில் உள்ள ஆதிச்சநல்லூர், பொருந்தல், கீழடி ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அகழ்வாய்வுச் சான்றுகளும் பழங்கால தமிழர் நாகரிகமும்
    • தமிழரின் பழங்கால நாகரிகம் பற்றிக் கல்வெட்டுகள், மாந்தஇயல் ஆதாரங்கள்
  3. தொல்காப்பியம்
    • தொல்காப்பியமும் பிறமொழி இலக்கியங்களும்: ஒரு ஒப்பாய்வு
    • ஐந்திணைக் கருத்துக்களும் அகப்பொருள் மரபும்
    • தொல்காப்பியத்தில் இடைச்செருகல்
    • தொல்காப்பியக் காலம்
  4. திருக்குறள்
    • திருவள்ளுவர், “உலக மக்களின் அறநூல் புலவன்.” (“The Bard of Universal man“ Dr. G.U. Pope)
    • திருக்குறள் பண்டைத்தமிழர்தம் பண்பாட்டு நாகரிகக் கருவூலம்
    • திருக்குறள் தற்கால வாழ்க்கைக்கும் வழிகாட்டும் அறநூல்
    • திருக்குறளும் பிறமொழியில் உள்ள அறநூல்களும்; ஒரு ஒப்பாய்வு
    • பிற நாடுகளில் திருக்குறளுக்கு வரவேற்பு
  5. அறிஞர் பெருமக்களைப் பற்றிய ஆய்வு
    • அறிஞர் பெருமக்கள் பழங்கால, இடைக்கால, மற்றும் தற்காலத் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகிய இவற்றின் ஆய்வுகளுக்குத் தந்த பெரும் பங்களிப்பு
  6. தமிழ் இசையும் கலைகளும்
    • தமிழ் இசை, கலைகள்; இவற்றின் பழமை
    • கருநாடக இசையில் தமிழ் இசையின் தாக்கம்
    • பழங்காலத்தில் வழங்கிய தமிழ் இசைக் கருவிகள்
    • தற்காலத் திரைப்படப் பாடல்களில் சங்க இலக்கியப் பாடல்களின் தாக்கம்
  7. தற்காலத் தமிழ் இலக்கியங்கள்
    • தமிழ் உரைநடை, செய்யுட்கள் (பாடல்கள்); இவற்றின் தற்கால போக்கு
    • தற்கால நாவல்களும் சிறுகதைகைளும்; இவற்றின் புதிய போக்கு
    • தமிழ்க்கல்விக்கும் ஆய்வுக்கும் கணினி பயன்படும் வகைகள்: ஒர் ஆய்வு
  8. தமிழ் மொழியும் மொழியியலும்
    • தொல்காப்பியம்: அதில் பொதிந்துள்ள மொழியியல் நுணுக்கங்களும் இலக்கியக் கோட்பாடுகளும்.
ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தலைப்புகள்: விரிவு